வவுனியாவில் புகையிரதத்தில் மோதிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் புகையிரதத்தில் மோதுண்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் கனகராயன்குளம் பகுதியில் பயணித்த புகையிரத பாதையில் ஒருவர் மீது மோதியுள்ளது.

விபத்தின் போது தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உடனடியாக ரயில்வே திணைக்களம் மற்றும் பொலிஸார் இணைந்து சடலத்தை மீட்டு கனகராயன்குளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

மீட்கப்பட்டவர் ரயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது ஏற்கனவே தாக்கப்பட்டு புகையிரத பாதையில் வைக்கப்பட்டுள்ளதா என கனரகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், சடலம் கறுப்புச் சட்டை அணிந்திருந்த நிலையில், அது கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்ததல்ல என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous articleயாழ் மழைவீழ்ச்சி பதிவை வெளியிட்ட அதிகாரி!
Next articleயாழ். போதனா வைத்தியசாலைக்கு மருந்துகள் ஏற்றிவந்த வாகனம் விபத்து!