யாழில் மருந்தகங்களின் ஊடாக போதை ஊட்டக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை !

யாழில் அதிகளவு உட்கொண்டால் போதைத்ரக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகள் மருத்துவர்கள் விற்பனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகவலானது இன்று ஆளுநர் மற்றும் நிதி அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவரின் பரிந்துரை சிட்டை இல்லாமல் 25 ரூபாய் மத்திரை 250 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சில வலி நிவாரணிகள் அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது அதன் போதைக்கு சிலர் அடிமையாகிவிடுவார்கள்.

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இதுபோன்ற மாத்திரைகளை உட்கொள்வது உயிருக்கு ஆபத்தானது.

எனவே அந்த மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம்.

இவ்வாறான நிலையில் வடக்கில் உள்ள சில மருந்தகங்களில் 25 ரூபா பெறுமதியான வலி நிவாரணி மாத்திரையை வைத்தியர் பரிந்துரை சீட்டு இன்றி வழங்கினால் 250 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, சில வைத்தியர்கள் சட்டவிரோதமான முறையில் இந்த மாத்திரைகளை விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் உள்ள மருது மொத்த விற்பனை நிலையத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியரும் வவுனியாவைச் சேர்ந்த வைத்தியரும் அதிகளவான வலி நிவாரண மாத்திரைகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் கோவிலுக்கு சென்றவர் கோவிலில் கால் கழுவும் இடத்தில் விழுக்கி விழுந்து உயிரிழப்பு!
Next articleதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலியான 4 வயது சிறுவன் !