வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வீடு விற்பனை – 43,700 டொலர்கள் இலாபம்!

இலங்கையில் உள்ள வீடுகளை அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யும் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு 3 வீடுகளை விற்பனை செய்ததன் மூலம் அரசாங்கம் 43,700 அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பன்னிபிட்டிய – வியாட்புர, கொட்டாவ மற்றும் மாலம்பே பிரதேசங்களில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் வீட்டுத் தொகுதிகளில் இந்த வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மேலும் 10 வீடுகளை வாங்க வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.

அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு இராச்சியம், இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து இலங்கையர்களால் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

Previous article6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை !
Next articleபண்டாரவளை பகுதியில் மின்னல் தாக்கத்தில் ஒருவர் காயம்; வீடு முற்றிலும் சேதம்!