பண்டாரவளை பகுதியில் மின்னல் தாக்கத்தில் ஒருவர் காயம்; வீடு முற்றிலும் சேதம்!

பண்டாரவளை பகுதியில் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாகவும் அவரின் வீடு முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று இடம்பெற்றுள்ளது.

மின்னல் தாக்கியதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு குடியிருப்புகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதன் போது குறித்த வீடுகளில் இருந்த மின்சாதனங்கள் சேதமடைந்துள்ளதுடன் வீட்டின் மின் இணைப்புகள் மற்றும் வீட்டு உடமைகள் சேதமடைந்துள்ளதுடன் வீட்டின் சுவர்களும் முற்றாக சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட வீடுகள் அனைத்தையும் பொலிஸார், இராணுவம், பிரதேச செயலக அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் பார்வையிட்டு சேத விபரங்களைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வீடு விற்பனை – 43,700 டொலர்கள் இலாபம்!
Next articleமீடியா துறையில் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு!