யாழில் மோடடார் சைக்களில் வந்த பெண் ஒருவர் முதியவர் மீது மோதியதால் முதியவர் பலி!

யாழில் வீதியோரம் சென்றுகொண்டிருந்த முதியவர் மீது பெண் ஒருவர் தடுமாறி மோட்டார் சைக்கிளை செலுத்தி அவர் மீது மோதியதால் முதியவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்று (11) யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் வீதியில் நடந்து சென்ற முதியவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த பெண் ஒருவர் மோதியுள்ளார்.

காயமடைந்த முதியவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார்.

இந்த விபத்தில் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 68 வயதான எஸ்.விக்கினேஸ்வரன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய பெண்ணை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஇன்றைய ராசிபலன் 02.11.2022
Next articleதிருகோணமலையில் ஐந்து மணித்தியாலங்கள் சத்திர சிகிச்சை மேற்கொண்டு சாதனை !