கிளிநொச்சியில் தனியார் விடுதியொன்றில் சடலமாக மீட்கப்பட்ட நபர்!

கிளிநொச்சியில் தனியார் விடுதியில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

இச்சம்பவமானது நேற்று கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி ஏ-09 வீதி பரந்தன் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தனியாக தங்கியிருந்த முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அந்த முதியவர் அந்த விடுதியில் தங்கியிருந்த போது, ​​கடந்த வெள்ளிக்கிழமை வரை அவர் தனது குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்ததாகவும், அதன் பின்னர் எவ்வித தொடர்பும் ஏற்படவில்லை எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

71 வயதுடைய நபரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற உத்தரவுக்கமைய பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Previous articleஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கு எதிராகக் ன்று ஆர்ப்பாட்டம்; கொழும்பில் குவிக்கப்பட்ட முப்படைகள்!
Next articleயாழ்ப்பாண இளைஞர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை!