நச்சுப் புகையை சுவாசித்ததால் 50இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பலர் வைத்தியசாலையில் !

பாணந்துறையிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் நச்சுப் புகையை சுவாசித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பனந்துறையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளியை அண்மித்த பகுதியில் சில எரிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதுடன், அதிலிருந்து வெளியேறும் புகையால், மாணவர்கள் சுவாசிப்பதில் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அதன்படி மாணவர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Previous articleசிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர் !
Next articleஇன்று காலை இடம்பெற்ற கோர விபத்து; 10 பேரின் நிலை?