இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து; 10 பேரின் நிலை?

இன்று காலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். வேகமாகச் சென்ற இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பத்து பேர் காயமடைந்து மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (02) காலை 7.30 மணியளவில் ஹட்டன் கண்டி பிரதான வீதியில் நாவலப்பிட்டி மெபிடிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

மறுபுறம் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறும் வீதியின் வளைவு ஒன்றிற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleநச்சுப் புகையை சுவாசித்ததால் 50இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பலர் வைத்தியசாலையில் !
Next articleயாழில் காணொளி அழைப்பை காதிலிக்கு ஏற்படுத்தி உயிரை மாய்த்த இளைஞன் : வெளியான காரணம்!