அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட கப்பல்!

அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அதன்படி, அமெரிக்காவின் முன்னாள் கடலோர காவல்படை கப்பலான பி-627 இன்று (02) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இது இலங்கையின் கடல்சார் இறையாண்மையை மேம்படுத்த உதவும் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

மேற்படி கடல் கண்காணிப்புக் கப்பல் கடந்த செப்டெம்பர் 3ஆம் திகதி அமெரிக்காவின் சியாட்டிலில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.