யாழில் வீதியால் சென்ற பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை! காதை கிழித்து தோட்டை பிடுங்கிய கொடூரம்!

யாழில் பெண் மூவரிடம் கத்தியை காட்டி காதை கிழித்து தோட்டை பிடித்த இழுத்துச்சென்ற சம்பவம் ஒன்ஞ பதிவாகியுள்ளது.

இச்சம்பவமானது இன்று யாழ்.அச்சுவேலி ஆஸ்பத்திரி வீதியில் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண்கள் வீதியால் நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் விலாசம் கேட்பது போல் விசாரித்துள்ளனர்.

இதனையத்து சிறிது நேரத்தில் அந்நபர் கத்தியை காட்டி மிரட்டி ஒருவருடைய தங்க சங்கிலி மற்றும் ஒரு கவரிங் சங்கிலி ஆகியவற்றை பறித்துள்ளார்.

தொடர்ந்து மற்ற பெண்ணிடம் இருந்து தோட்டை இழுத்து பிடுங்கியுள்ளனர். இதனால் காது கிழந்த நிலையில் அந்த பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

Previous articleகற்பூரவல்லி (ஓமவல்லி) இலையின் அற்புத மருத்துவ குணங்கள் !
Next articleகொழும்பில் படையினருடன் மக்கள் தள்ளுமுள்ளு! தொடர்ந்தும் பதற்றம் !