இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை! விஷத் தன்மை தொடர்பில் வெளியான தகவல் !

இலங்கையில் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான க்ரீம் வகைகளால் சரும பிரச்சனைகள் ஏற்படுவதாக தோல் நோய் வைத்திய நிபுணர் டாக்டர் சஞ்சீவ ஹுலங்கமுன தெரிவித்துள்ளார்.

இன்றைய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தில் பலர் இத்தகைய முகப்பூச்சுகளை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

மேலும் இதுபோன்ற அழகுசாதனப் பொருட்களை முகத்தில் பயன்படுத்துவதால் பருக்கள் மற்றும் தேவையற்ற முடிகள் ஏற்படும்.

கண்களைச் சுற்றி இத்தகைய அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது கண் அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் கண்புரை கூட ஏற்படலாம்.

முறையான மருத்துவ குணம் இல்லாத இதுபோன்ற முக வர்ணங்களை பயன்படுத்துவதால் சருமத்தில் நச்சுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleபோராட்டக்களத்தில் பொலிஸார் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்திய ஹிருனிக்கா !
Next articleகனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை: வெளியான காரணம்!