பதவியை இராஜினாமா செய்ய தயாராகும் அமைச்சர்!

தனது பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையிலான சமூக இயக்கத்தில் இணைவது குறித்து ஆலோசித்து வருவதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிவுக்கு வந்தால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தில் இணைந்து கொள்வேன் என்றார்.

கருஜயசூரிய விக்டர் ஐவனின் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் ஒரு சிறந்த நோக்கத்திற்காக குரல் கொடுப்பதாக நான் நினைக்கிறேன், அவர்கள் சமீபத்தில் தங்கள் திட்டங்களை எங்களிடம் தெளிவுபடுத்தியுள்ளனர், அதுவே சிறந்த வழி என்று நான் நினைக்கிறேன்,” ஹரின் பெர்னாண்டோ கூறினார்.

எனது அரசியல் வாழ்க்கையை விட்டுவிட்டு அதில் இணையவுள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இனம், மதம் என பிரிந்து நாம் பிளவுபட்டுள்ளதால் இலங்கை அரசியலின் முழு கருத்தும் தவறானது என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுயநலவாதி என்றும் ஜனாதிபதியாக பதவியேற்பதில் உறுதியாக இருப்பதாகவும் ஹரீன் பெர்னாண்டோ கடுமையாக சாடியுள்ளார்.

அது இலகுவானதல்ல, நாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு காரணமானவரின் முகத்தை மாத்திரம் நீங்கள் மாற்றுகிறீர்கள் என ஹரின் பெர்னாண்டோ சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Previous articleமின்வெட்டு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
Next articleபேஸ்புக் விளம்பரத்தால் ஏமாற்றமடைந்த இளைஞன்!