யாழில் கர்ப்பவதி பெண்களுக்கும் பாலுட்டும் தாய்மாருக்கும் வெளியான மகிழ்ச்சி தகவல்!

யாழில் கர்ப்பவதி பெண்களுக்கும் பாலுட்டும் தாய்மாருக்கும் வெளியான மகிழ்ச்சி தகவல் ஒன்று வெளியாகியள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டத்தின் ஊடாக யாழ்.மாவட்டத்திலும் மேற்படி கொடுப்பனவு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த கொடுப்பனவு சமுர்த்தி வங்கிகள் ஊடாக வழங்கப்படும். எனவே கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் சமுர்த்தி வங்கியின் ஊடாக இந்தக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Previous articleபேஸ்புக் விளம்பரத்தால் ஏமாற்றமடைந்த இளைஞன்!
Next articleபாணின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு !