யாழில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

யாழ்ப்பாணக் குடாநாட்டில் கடந்த சில மாதங்களில் போதைப் பொருளுக்கு அடிமையாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் டி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனையினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவினால் கல்லீரல் மற்றும் இதயத்தில் வீக்கம் ஏற்பட்டு பல மரணங்கள் அண்மைக் காலமாக இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த விசேட படையணி அமைக்கப்பட்டு விசேட விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Previous articleபாணின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு !
Next article335 பயணிகளுடன் இலங்கை வந்த அஸூர் ஏர் விமானம்!