335 பயணிகளுடன் இலங்கை வந்த அஸூர் ஏர் விமானம்!

இலங்கைக்கான தனது விமான சேவையை ஆரம்பித்துள்ள ரஷ்யாவின் மிகப்பெரிய தனியார் விமான சேவை பட்டய விமான சேவையான “Azure Air” சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த விமானம் 335 பயணிகளுடன் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், பிரான்ஸ் கொடியை ஏந்திய ஏர் பிரான்ஸ் விமான சேவை நாளை (04) முதல் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சுவிஸ் தேசிய விமான சேவையும் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் இலங்கையில் விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Previous articleயாழில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !
Next articleஇலங்கையிலிருந்து தொழிலுக்காக வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!