இலங்கையிலிருந்து தொழிலுக்காக வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

சுற்றுலா விசாவில் வேலைக்காக வெளிநாடு செல்ல வேண்டாம் என இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் சென்றவர்களில் சிலர் வேலையிழந்துள்ளதாக பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்ல எதிர்பார்த்தவர்களை சுற்றுலா விசா மூலம் பதிவு செய்யும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Previous article335 பயணிகளுடன் இலங்கை வந்த அஸூர் ஏர் விமானம்!
Next articleபெரசிட்டமோல் மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு