நாட்டில் குறைவடைந்த புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை!

புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் அறிக்கையின்படி, நாட்டில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 9.1 வீதத்தால் குறைந்துள்ளது.

மேலும், புகைப்பிடிப்பவர்களில் 51 வீதமானவர்கள் புகைப்பிடிப்பதை விட்டுவிடுவார்கள் என அவர் நம்புவதாகவும் அதிகார சபையின் தலைவர் டாக்டர் சமதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வர்த்தக நிலையங்களில் சிகரட் சில்லறை விலையேற்றம் அவர்களுக்கு தடையாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, சிகரெட்டுகளுக்கு தடை விதிப்பதுடன், சிகரெட்டின் விலையை அதிகரித்து அதற்கான விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் கலாநிதி சமதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனவே இதனை தடை செய்வதுடன் சிகரெட்டின் விலையை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் அதற்கான விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனவும் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் கலாநிதி சமதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.