யாழில் வீடொன்றின் கட்டிலுக்கடியில் இருந்து பிடிபட்ட இளைஞன் : விசாரணைகள் தீவிரம்!

யாழில் வீடொன்றின் கட்டிலுக்கடியில் இளைஞன் இளைஞன் ஒருவன் இருந்து பிடிபட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவமானது யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் புகுந்து கட்டிழுக்கு அடியிரல் படுத்து இருந்துள்ளான்.

இதனையடுத்து இதை அவதானித்த வீட்டின் உரிமையாளர் சத்தம்போட்டதையடுத்து அவன் மதில்பாய்ந்து ஓடியதாகத் தெரியவருகி்ன்றது.

இதனையடுத்து அந்த இளைஞனை அக்கம்பக்கத்தினர் துரத்திபிடித்துள்னர்.

இளைஞன் படுத்திருந்த இடத்தில் அரை குறையாக சாப்பிட்டு வைத்த மீதிப் பேரீச்சைப் பழங்கள் , வீட்டில் சார்ஜ்சில் வைக்கப்பட்டிருந்த “phone power bank” போன்றன காணப்பட்டுள்ளன.

இவன் திருடச் சென்றானா? அல்லது வேறு ஏதாவது நோக்கத்திற்கு வீட்டின் உள்ளே சென்றானா? என விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன.

பிடித்த இளைஞனை பொலிஸாரிடம் அப்பகுதி மக்கள் ஒப்படைத்துள்ளனர்.

இதே வேளை இவன் மூளாய்ப் பகுதியிலும் களவெடுத்து பிடிபட்டவன் என தெரியவருகின்றது.