முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொரோனா வைரஸ் உறுதி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொரோனா வைரஸ் உறுதியானதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்க கூடிய தகவல்கள் தெரிவிக்கின்றன!

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவர் சிகிச்சைக்காக கொழும்பு ITH மருத்துவமனைக்குச் சென்றார்.

மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் மைத்திரிபால சிறிசேனவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் வட்டிக்கு மேல் வட்டி வாங்கிய வர்த்தகரின் விபரீத முடிவு !
Next articleவவுனியாவில் களமிறக்கப்பட்டுள்ள மோப்ப நாய்கள்!