வவுனியாவில் களமிறக்கப்பட்டுள்ள மோப்ப நாய்கள்!

வவுனியா, நெளுக்குளம் பொலிஸார் மோப்ப நாய் உதவியுடன் விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா, நெளுக்குளம் சந்தி பகுதியில் இன்று (04.11) காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வடக்கில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல் அதிகரித்துள்ளதுடன், வவுனியாவிலும் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் விற்பனை, நுகர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் நெளுக்குளம் பொலிஸார் மோப்ப நாய் உதவியுடன் அவ்வழியாகச் சென்ற பஸ்கள் மற்றும் சொகுசு வாகனங்களை மறித்து சோதனையிட்டதுடன் சந்தேகத்திற்கிடமான இடங்களையும் மக்களையும் சோதனையிட்டனர்.

Previous articleமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொரோனா வைரஸ் உறுதி!
Next articleயாழ்.போதனா வைத்தியசாலை விடுத்த முக்கிய அறிவிப்பு !