யாழ். ரயில் மோதி இளைஞனுக்கு நேர்ந்த துயரம் !

யாழில் இளைஞர் ஒருவர் மீது ரயில் மோதியதால் பலத்த காயங்களுக்கு மத்தியில் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று புங்கங்குளம் ரயில் நிலையத்திற்கு அண்மையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம்- காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட ரயிலே குறித்த இளைஞனை மோதியது.

படுகாயமடைந்த இளைஞரை அதே ரயிலில் ஏற்றி யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

குறித்த நோயாளியை வண்டியில் ஏற்றிக்கொண்டு யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleகவர்ச்சி உடையில் வந்து அதிர்ச்சி கொடுத்த லாஸ்லியா!
Next articleயாழில் நகைக்கடை ஒன்றில் சங்கிலி ஒன்றை திருடிக் கொண்டு வவுனியாவுக்கு தப்பியோட்டம்!