யாழில் புகையிரதத்தில் அடிபட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழப்பு : வெளியான அதிர்ச்சித்தகவல்!

யாழில் நேற்றையதினம் புகையிரதத்தில் அடிபட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று மாலையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர் புகையிரத்தின் முன் தற்கொலை செய்ய பாய்ந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர் நேற்றையதினம் காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட ரயிலில் குறித்த இளைஞன் மோதியுள்ளார்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் அதே ரயிலில் மீண்டும் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

அங்கிருந்து நோயாளர் காவு வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று மாலை உயிரிழந்தார்.

உயிரிழந்த இளைஞர் பாண்டியன் தாழ்நிலத்தைச் சேர்ந்த 21 வயதுடைய வெற்றிவேல் தினோயன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற

Previous articleயாழில் அதிகரித்து வரும் நோய்; 2774 பேர் பாதிப்பு!
Next articleஇலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல் !