வவுனியாவில் விபத்துககுள்ளான பேருந்துகளை அகற்றும் நடவடிக்கைகளில் இராணுவம்!

வவுனியாவில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளான பேருந்துகளை அகற்றும் தீவிர பணியில் இராணுவம் இறங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தினால் ஏ9 சாலையில் நெடுந்தொலைவு வரைக்கும் வாகனங்கள் தடைப்பட்டு இருந்துள்ளது.

இதனால் அப்பகுதியில் வாகன நெரிசல் அதகம் காணப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதி சொகுசு பஸ் வவுனியா, நொச்சிமோட்டைப் பகுதியில் விபத்துக்குள்ளானது,

இதனைத்தொடர்ந்து வந்த மற்றொரு பேருந்தும் பாதைமாறி வீதியை விட்டு இறங்கியுள்ளது.

பாரந்தூக்கியுடன் துணையுடன் விபத்துக்குள்ளான சொகுசு பேருந்துகள் இராஞவத்தினரால் மீட்க்பட்டுள்ளது

இதன் காரணமாக A9 வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் A9 வீதி பாலத்தின் இரு முனைகளிலும் ஒரு கிலோமீற்றர் வரை மூடப்பட்டுள்ளது.

Previous articleஇலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய பரபரப்பு சம்பவம்: கணவன் – மனைவி உயிரிழப்பு!
Next articleயாழில் தொலைபேசி விற்பனை நிலையத்திற்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்தியவர் கைது!