யாழ்.பல்கலைகழக மாணவி உட்பட வவுனியா விபத்தில் உயிரிழந்தோர் விபரம் வெளியானது..!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் யாழ்.பல்கலைக்கழக மாணவி , பேருந்து சாரதி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவி நாவலம்பிட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் அஜகரி (வயது 23). உடுப்பிட்டி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எஸ்.சிவரூபன் (வயது 32) என்பவரே சாரதியாவார்.

பருத்துறையைச் சேர்ந்த ராமலிங்கம் நிதர்சன் (வயது 24) என்ற 3 பேரே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் வவுனியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்த விபத்தில் 16 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், 4 பேர் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Previous articleயாழில் தொலைபேசி விற்பனை நிலையத்திற்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்தியவர் கைது!
Next articleயாழ்.கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப பாடசாலைக்கு புளொட் அமைப்பினால் நிதியுதவி!