வவுனியா விபத்தில் பலியான சாரதி தொடர்பில் வெளியான தகவல்கள் !

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் சாரதி மற்றும் பெண் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த பஸ் சாரதி சிவபாலன் சிவரூபன் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாரதி உடுப்பிட்டியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

மேலும், கிராமத்தின் பல்வேறு சமூக மற்றும் மத நடவடிக்கைகளில் முன்னணியில் இருப்பவர் என்றும், சமூக நடவடிக்கைகளின் மூலம் கிராம மக்களால் விரும்பப்படும் கடின உழைப்பாளி என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அவரது திடீர் மறைவு உடுப்பிட்டி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழ்.கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப பாடசாலைக்கு புளொட் அமைப்பினால் நிதியுதவி!
Next articleஇலங்கை குடியேற்றவாசிகளின் புகலிட கோரிக்கை நிராகரிப்பு! பிரான்சில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கையர்கள்!