யாழில் தனியார் விடுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல்!

யாழில் தனியார் விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவமானது சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி வீதியில் இடம் பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை வாளால் தாக்கிவிட்டு இன்று அதிகாலை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்ற போது குறித்த இளைஞர் தனியார் ஹோட்டல் ஒன்றில் காவலாளியாக கடமையாற்றியிருந்தார்.

இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

குறித்த சம்பவத்தில் பத்மனி அச்சுவேலி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் சிந்துயன் என்ற இளைஞன் வாள் வெட்டுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleநுவரெலியாவில் வீதியில் பயணித்த கார் விபத்து : அதில் பயணித்தவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
Next articleஅகதிகளாக தமிழகம் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !