அகதிகளாக தமிழகம் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

இலங்கையில் இருந்து மேலும் 10 அகதிகளும், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று மாத குழந்தையும் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

நேற்று இரவு மன்னாரில் இருந்து படகில் புறப்பட்டு இன்று (சனிக்கிழமை) அதிகாலை 1 மணியளவில் நடுதிடு பகுதியை வந்தடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ராமேஸ்வரம் மரைன் போலீசார், இலங்கை தமிழர்களை மீட்டு ராமேஸ்வரம் கடல் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலதிக விசாரணையின் பின்னர் 10 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படவுள்ளதாக மரைன் பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் இன்று வரை 198 இலங்கைத் தமிழர்கள் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர்

Previous articleயாழில் தனியார் விடுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல்!
Next articleஇலங்கைக்கு அரிசி நன்கொடை !