வரலாற்றில் முதல் தடவை… சாதனை படைத்த காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி !

வரலாற்றில் முதன்முறையாக காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி, கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் அண்மையில் நடைபெற்ற ஹொக்கிப் போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளது.

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஹொக்கிப் போட்டிகள் அண்மையில் விபுலானந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியில் கிழக்கு மாகாணம் மற்றும் அம்பாறை மாவட்டத்திலிருந்து நான்கு அணிகள் மாத்திரமே பங்குபற்றியிருந்தன.

இறுதிப் போட்டியில் காரைதீவு விபுலானந்தா மற்றும் அம்பாறை டி.எஸ். சேனநாயக்க அணியும் மோதின.

அம்பாறை டி.எஸ். குறித்த போட்டிகளில் 4-1 என்ற கோல் கணக்கில் முதலிடத்தை வென்றது. சேனநாயக்க கல்லூரி அணியும், விபுலானந்தா மத்திய கல்லூரி அணியும் இரண்டாம் இடத்தைப் பெற்றதாக கல்லூரி அதிபர் குறிப்பிட்டார்.

Previous articleபிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போகும் முக்கிய போட்டியாளர்!
Next articleவிஜய்யின் வாரிசு ‘ரஞ்சிதமே’ முழு பாடல் வெளியானது.. இதோ!