பிரான்ஸில் மனைவியைக் கொன்ற கணவன்!

பிரான்ஸின் 92வது மாவட்டத்தில் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவியைக் கொன்றுவிட்டு, “நான் என் மனைவியைக் கொன்றுவிட்டேன்” என்று தெருவில் நடந்து சென்றபோது கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரின் வீட்டிற்கு சென்ற பொலிஸார் சடலமாக கிடந்த அவரது மனைவியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொலை நடந்தபோது இருவரது குழந்தைகளும் வீட்டில் இருந்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் ஆபிரிக்க கண்டத்தில் உள்ள தீவைச் சேர்ந்த 53 வயதுடையவர் எனவும், கொலைக்கு பயன்படுத்திய கத்தி அவரது கையில் காணப்பட்டதாகவும், உடலில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பிரான்சில் சமீபகாலமாக அதிகரித்து வரும் கொலைச் சம்பவங்கள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleவிஜய்யின் வாரிசு ‘ரஞ்சிதமே’ முழு பாடல் வெளியானது.. இதோ!
Next articleஇன்றைய ராசிபலன் 06/11/2022