வெளிநாடு செல்லவிருந்த யாழ் இளைஞருக்கு நேர்ந்த நிலை!

வவுனியா – நொச்சிமோட்டையில் நேற்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் வெளிநாடு செல்லவிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பருத்துறை இன்பர்சிட்டியைச் சேர்ந்த ராமலிங்கம் நிதர்சன் (வயது 25) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெளிநாட்டு பயண ஏற்பாடுகளுக்காக மேற்படி பேருந்தில் பேர்த்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த பேருந்து விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஇன்றைய ராசிபலன் 06/11/2022
Next articleஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு குரங்கம்மை நோய் அதிகமாக பரவும்!