ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு குரங்கம்மை நோய் அதிகமாக பரவும்!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உயிரணு தொடர்பான கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர கூறுகையில், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு குரங்கம்மை பரவும் அபாயம் அதிகம்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளின் பிரகாரம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளை தவிர்ப்பதன் மூலம் குரங்கம்மை பரவுவதை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கண்டறியப்பட்ட நோயாளிகளில் 99 வீதமானவர்கள் ஆண்கள் எனவும் அவர்களில் 95 வீதமானவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குரங்கம்மை பாதிக்கப்பட்ட முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleவெளிநாடு செல்லவிருந்த யாழ் இளைஞருக்கு நேர்ந்த நிலை!
Next articleஇந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக பீடி இலைகளை கடத்திச் செல்ல முற்பட்ட சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!