கிரிக்கெட் விளையாட போன நாட்டில் பெண் ஒருவரை சீரழித்து கைதான கிரிக்கெட் வீரர் : அவர் இல்லாமல் கிரிக்கெட் விளையாட முடிாததால் இலங்கை திரும்பும் கிரிக்கெட் அணி!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (5) அவுஸ்திரேலியாவின் சிட்னியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தனுஷ்க குணதிலக்க இல்லாமல் இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் இருந்து கொழும்பு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குணதிலகவை 2018 இல் இலங்கை கிரிக்கெட்டிலிருந்து தவறான நடத்தைக்காக இடைநீக்கம் செய்யப்பட்டார். இதன் போது, ​​ தனுஷ்க குணதிலக்க இதே போன்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இலங்கையில் நோர்வே பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில் குணதிலகவை மற்றும் அவரது நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

எனினும் சம்பவம் தொடர்பில் அவரது நண்பர் கைது செய்யப்பட்டு விசாரணையில் தனுஷ்காவிற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை என தெரியவந்ததையடுத்து அவர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஇந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக பீடி இலைகளை கடத்திச் செல்ல முற்பட்ட சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!
Next articleயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் மீது குற்றச்சாட்டு!