நுவரெலியாவில் சோகத்தை ஏற்படுத்திய சிறுமியின் மரணம்!

நுவெரெலியாவில் சிறுமி ஒருவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவழத்துள்ளனர்.

இச்சம்பவமானது நுவரெலியா மாவட்டம் – கொத்மலை, வெதமுல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள கால்வாயை கடக்க முயன்ற போது சிறுமி நீரிழ் அடித்து செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர், பிரதேசவாசிகள் சிறுமியை கண்டுபிடித்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்துள்ளார்.

வெதமுல்ல – ஹாமில்டன் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமி தனது சகோதரியுடன் கால்வாயை கடக்க முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleயாழ். குடும்பஸ்த்தர் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பலி!
Next articleவெளிநாட்டவர்களுடன் திருமணம் செய்துக்கொண்ட இலங்கையர்கள்! இத்தனை பேரா?