வெளிநாட்டவர்களுடன் திருமணம் செய்துக்கொண்ட இலங்கையர்கள்! இத்தனை பேரா?

1,648 இலங்கையர்களுக்கு வெளிநாட்டவர்களை திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு கடந்த 10 மாதங்களில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இக்காலப்பகுதியில் வெளிநாட்டினரை திருமணம் செய்ய 1,701 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டில் பிறந்தவர்கள்.

இந்த திருமணங்களுக்கு அனுமதி வழங்கும்போது, ​​திருமணம் செய்துகொள்பவர்களின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ததாகவும் அவர் கூறினார்.

Previous articleநுவரெலியாவில் சோகத்தை ஏற்படுத்திய சிறுமியின் மரணம்!
Next articleவடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகமானதிற்கு வெளியான காரணம்!