இலங்கையில் பெற்றோர்கள், மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

இலங்கையில் பாடசாலை பொருட்கள் உட்பட பாடசாலை பொருட்களின் விலைகள் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சிடும் நடவடிக்கைகளுக்குத் தேவையான காகிதம் மற்றும் இதர பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையே இந்த விலை உயர்வுக்கு காரணம் என பாடசாலை உபகரண விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக சந்தையில் காகிதத்தின் விலை அதிகரிப்பு, இலங்கையின் வங்கி வட்டி வீதம் அதிகரிப்பு மற்றும் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி என்பன காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Previous articleவடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகமானதிற்கு வெளியான காரணம்!
Next articleஇன்றைய ராசிபலன் 07/11/2022