யாழ். பல்கலைகழக மாணவியின் மரணம் – சோகமயான கிராமம்!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு வாகனம் ஒன்று நேற்று இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் முதலாம் வருட மாணவன் 23 வயதான இராமகிருஷ்ணன் சயகரி என்ற இளைஞனே இந்த கோர விபத்தில் உயிரிழந்துள்ளார்.

நாவலப்பிட்டியில் உள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடலுக்கு இன்று மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பல கனவுகளுடன் பல்கலைக்கழகம் சென்ற மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விடுமுறைக்காக குடும்பத்துடன் சென்றிருந்த வேளையில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த மாணவியின் பெற்றோர் விசேட தேவையுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஇலங்கையில் மீண்டும் முகக் கவச பயன்பாடு – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !
Next articleகனடாவில் வேலைவாய்ப்பு – லட்சக்கணக்கானோரை உள்வாங்க திட்டம்..!