தரம் 5 மாணவர்கள் மூவர் மீது கொடூர தாக்குதல் -காவல்துறையும் உடந்தை !

ஹொரண மிலேனியம் மாவட்ட பாடசாலையொன்றின் 5 வருட மாணவர்கள் மூவர் பாடசாலையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் உதயகுமார அமரசிங்கவின் ஆலோசனையின் பேரில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதிபரின் அழைப்பை அடுத்து வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவர்களை மண்டியிட வைத்து மின்சாரம் தாக்கியதாக தெரியவருகிறது.

மூன்று மாணவர்களும் கைவிலங்கிடப்பட்டு பள்ளிக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் கடந்த 2ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த இரண்டு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர் ஒருவரின் உடலில் பல தீக்காயங்கள் காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் உதய உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

பெண் ஆசிரியை ஒருவரின் பணப்பை காணாமல் போன சம்பவம் தொடர்பில், குறித்த பாடசாலையின் ஐந்தாம் வருட மாணவர்கள் பன்னிரெண்டு பேரை பாடசாலையின் நூலக அறையில் வைத்து அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சிலர் தாக்கியுள்ளனர்.

மேலும், மில்லினிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பொலிஸ் ஜீப்பில் மூன்று அதிகாரிகள் அங்கு வந்தனர். முதற்கட்ட விசாரணைகளின் போது மூன்று மாணவர்களை வாகனத்தில் ஏற்றி பாடசாலைக்கு வெளியே அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளதாக தலைவர் தெரிவித்தார்.

Previous articleவாய்த்தர்க்கம் முற்றியதால் ஏற்பட்ட விபரீதம் – முன்னாள் இராணுவ வீரர் படுகொலை!
Next articleயாழில் இருந்த வந்த தொடருந்தில் மது போதையில் சிக்கிய ஊழியர் !