யாழில் இருந்த வந்த தொடருந்தில் மது போதையில் சிக்கிய ஊழியர் !

யாழ்ப்பாணம் – அநுராதபுரம் காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவு அஞ்சல் ரயிலில் தூங்கும் பெட்டிகளுக்கு பொறுப்பாக இருந்த ஊழியரை மதுபோதையில் கைது செய்துள்ளதாக அநுராதபுரம் கோச் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

புகையிரதத்தின் பிரதான கட்டுப்பாட்டாளர் அனுராதபுரம் புகையிரத கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு அறிவித்ததையடுத்து அவர் அனுராதபுரம் புகையிரத நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை கைது செய்தபோது அந்த ஊழியர் மது வாசனை வீசியது தெரியவந்தது. குறித்த ஊழியர் அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு அனுராதபுரம் திடீர் மரண விசாரணை அதிகாரியால் பரிசோதிக்கப்பட்ட போது அவர் மதுபோதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட புகையிரத ஊழியர் மாளிகாவத் தொடரூந்து நிலைய அலுவலகத்தின் கீழ் கடமையாற்றும் ஊழியர் என தெரியவந்துள்ளது. ஊழியர் தொடர்பான மேலதிக விசாரணைகளை திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

Previous articleதரம் 5 மாணவர்கள் மூவர் மீது கொடூர தாக்குதல் -காவல்துறையும் உடந்தை !
Next articleயாழ்ப்பாணத்தில் நாளை முதல் அமுலாகும் புதிய நடைமுறை !