2022 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று – மறந்தும் இதை செய்யாதீர்கள்!

இந்த ஆண்டின் கடைசி மற்றும் இரண்டாவது சந்திர கிரகணம் நவம்பர் 8ஆம் தேதி நிகழவுள்ளது.மேஷ ராசியில் சந்திரன் ராகுவுடன் சேரும் போது கிரகணம் ஏற்படுகிறது.

சந்திர கிரகணத்தின் போது ராசிக்காரர்கள் சிலருக்கு தோஷம் ஏற்படும், எனவே அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நவம்பர் 8, 2022 செவ்வாய் அன்று முழு சந்திர கிரகணம் நிகழும். இது 2022 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.

இது இந்தியாவிலும் இலங்கையிலும் பிற்பகல் 2.48 மணிக்கு தொடங்கி மாலை 06:18 மணிக்கு முடிவடையும். விஞ்ஞானத்தின் படி, சந்திர கிரகணத்தின் போது, ​​பூமியின் நிழல் அதன் மீது விழுவதால் சந்திரன் இரத்த சிவப்பு நிறத்தில் தோன்றும்.

பொதுவாக கிரகண காலம் தோஷ காலமாக கருதப்படுவதால் சில செயல்களை செய்யக்கூடாது என்று கூறப்படுகிறது. கிரகணம் தொடங்கும் முன் 9 மணிக்கு முன் கோயில்கள் மூடப்படும். சமைத்த உணவும் கெட்டதாகக் கருதப்படுவதால் கிரகணத்தின் போது யாரும் சமைக்கக் கூடாது என்றும் நம்பப்படுகிறது.

இந்த நாளில் எந்த முக்கிய முடிவும் எடுக்கக்கூடாது என்று சந்திர மனோ காரகன் சொல்வார். பலர் குழப்பமான மனநிலையில் இருப்பார்கள். எனவே இந்த நாளில் வர்த்தகம் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்களை வைக்க வேண்டாம். இந்நாளில் யாரிடமும் கடன் வாங்கவோ, கடன் கொடுக்கவோ கூடாது என்பதும் ஐதீகம்.

சந்திர கிரகணத்தின் நேரம் மதியம். அந்த நேரத்தில் பயணம் செய்வது தவிர்க்க முடியாதது என்றாலும், வாகனங்களில் அதிவேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும். நிதானம் அவசியம். கிரகணம் உச்சத்தில் இருக்கும் போது வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. ஆன்மீக தியானத்தில் ஈடுபடுங்கள்.

கிரகணத்தின் போது சமைத்த உணவை உண்ணக் கூடாது என்பார்கள். கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது, ஆனால் அவர்கள் சில மணிநேரங்களுக்கு சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். கிரகணத்தின் போது வெளியே கூட செல்ல வேண்டாம். கருவில் இருக்கும் குழந்தையின் நலன் கருதி வீட்டின் உள்ளே ஜன்னல் கதவுகளை மூடி அமர்ந்து கொள்வது நல்லது. கிரகணத்தின் உச்ச நேரத்தில் தண்ணீர் அருந்துவதைக் கூட தவிர்ப்பது நல்லது.

கிரகணத்தின் போது தூங்கக் கூடாது என்கிறார்கள். அதே போல தாம்பத்திய உறவில் ஈடுபடக்கூடாது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். மாலையில் கிரகணம் முடிவடையும், அதன் பிறகு வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையில் தீபம் ஏற்றி குல தெய்வம் மற்றும் குல தெய்வ வழிபாடு செய்தால் கிரகண கால தோஷங்கள் விலகும்.