இராணுவ வசமானது யாழ்ப்பாணம் ,சோதனைகள் தீவிரம் – மக்கள் அச்சத்தில் !

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவத்தினர் முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்து வீதியில் பயணிப்பவர்களை சோதனையிடவுள்ளதாக யாழ் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர தெரிவித்தார்.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த நீதி அமைச்சர் மற்றும் வடமாகாண ஆளுநரினால் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. வடமாகாண ஆளுநரின் பரிந்துரையின் அடிப்படையில் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களை கைது செய்வதற்காக யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களில் இன்று முதல் இராணுவத்தினரால் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. என்றும் கூறினார்

அவரும்
போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால், அருகில் உள்ள இராணுவ முகாமில் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு உதவியாக இருக்கும் என்று கூறினார்.

எனினும் இன்று முதல் யாழ்ப்பாணத்தில் முக்கிய இடங்களில் இராணுவத்தினரால் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளது எனவே பொதுமக்கள் இந்த விடயத்தில் எமக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவே எமது எதிர்கால சந்ததியினர் போதைப்பொருளுக்கு அடிமையாவதற்கு இடமளிக்க மாட்டோம்.

. ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என்றார்.

Previous article2022 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று – மறந்தும் இதை செய்யாதீர்கள்!
Next articleஅனுமதிப்பத்திரம் இல்லாத துப்பாக்கியுடன் சட்டத்தரணி கைது