யாழில் மேல் மாடியில் வீட்டார் உறக்கம், கீழே கதவை உடைத்து உள்நுழைந்து கொள்ளையர்கள் கைவரிசை!

யாழில் மேல் மாடியில் வீட்டார் உறங்கி கொண்டிருந்த வேளை கீழ் வீட்டில் நுழைந்த கொள்ளையர் வீட்டில் இருந்த 3 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் பணத்தை சுருட்டிச்சென்றுள்ளார்.

இச்சம்பவானது நேற்று யாழ்.சுதுமலையில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

மாடியில் வீடு உள்ளது. அந்த வீட்டில் வசிப்பவர்கள் மேல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, ​​கீழ் வீட்டின் கதவை அதிநவீன முறையில் திறந்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.

கீழ் வீட்டில் 3 லட்சத்து 42 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். தூங்கி எழுந்த குடும்பத்தினர் கீழே வந்து பார்த்தபோது, ​​வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து, வீட்டுக்குள் பணம் வைக்கப்பட்டிருந்த இடத்தை பார்த்தனர்.

அங்கு வைத்திருந்த 3 லட்சத்து 42 ஆயிரம் ரூபாயை காணவில்லை. சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Previous articleயாழில் கைதான நால்வர் : வெளியான காரணம்!
Next articleயாழில் சிறுமி குளிக்கும் போது இளைஞன் செய்த செயல் !