கடவுச்சீட்டு வழங்குவது இடைநிறுத்தம் !

கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள அதன் தலைமை அலுவலகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் கடவுச்சீட்டு வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பான அதன் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த இடைநீக்கம் செய்யப்பட்டதாக அது கூறியது.

மறு அறிவித்தல் வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Previous articleயாழில் இன்றுகாலை இடம்பெற்ற அதிரடி நடவடிக்கை!
Next articleவெளிநாட்டவர்களால் இலங்கைக்கு காத்திருக்கும் அபாயம்!