வாகன விபத்தில் நான்கு வயது சிறுவன் உயிரிழப்பு !

கல்கமுவ, குருநாகல் அனுராதபுரம் வீதியில் வாகனம் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான்கு வயது சிறுவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பத்தேனியாவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் பின்னால் பயணித்த இரண்டு பெண்கள், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் பலத்த காயமடைந்து கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் போது கல்கமுவ பிரதேசத்தில் வசித்து வந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleவெளிநாட்டவர்களால் இலங்கைக்கு காத்திருக்கும் அபாயம்!
Next articleகனடாவில், நபர் ஒருவருக்கு குடும்ப இலக்கங்கள் கொண்டு வந்த மாபெரும் அதிர்ஸ்டம் !