யாழில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 53 வயதான நபரை திருமணம் செய்யுமாறு தனது பெற்றோர் வற்புறுத்தவதாக 15 வயது சிறுமி பொலிஸில் வாக்குமூலம்!

யாழில் நெதர்லாந்து நாட்டைச்சேர்ந்த 53 வயதான புலம்பெயர் நபரை திருமணம் செய்யுமாறு பெற்றோர் வற்புறுத்துவதாக 15 வயது சிறுமி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இச்சம்பவமானது யாழ். அச்சுவேலி பொலிஸார் பிரிவிட்குட்பட்ட பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து சிறும பிரான்சில் வசிக்கும் 20 வயது இளைஞனுடன் தலைமறைவாகி இருந்துள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் குறித்த சிறுமி மற்றும் பெற்றோரை கைது செய்ததையடுத்து சிறுமியை மருத்துவ வரிசோதனையின் பின் சிறுமி அச்சுவேலி சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது சிறுமியிடம் அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியிடம் தனது பெற்றோர் நெதர்லாந்தில் வசிக்கும் 53 வயதான நபருடன் தன்னை நிர்வானமாக வீடியோ கால் கதைக்க சொல்லி பெற்றோர்தாக்கியதாகவும் மேலும் அவரையும் நிர்வானமாக கோல் கதைக்குமாறு கூறியதாகவும் இவரை திருமணம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வற்புருத்தி வந்ததாகவும் பொலிஸாரிடம் சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் பெற்றோரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.