யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் மண்டைதீவு மற்றும் நாச்சிக்குடாவை சேர்ந்த இருவர் கைது!

இந்தியாவில் இருந்து நெடுந்தீவு கடற்பகுதி ஊடாக கடத்தி வரப்பட்ட சுமார் 458 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவுக் கடலில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த படகை இடைமறித்த கடற்படையினர், அதில் வைத்திருந்த 458 கிலோ கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது, ​​கஞ்சாவை ஏற்றிச் சென்ற இரு படகோட்டிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் மண்டைதீவைச் சேர்ந்தவர்

மற்றவர் நாச்சிகுடாவை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Previous articleயாழில் பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து : இருவருக்கு ஏற்பட்ட நிலை!
Next articleயாழில் கோவில் பிரச்சினை தொடர்பாக ஆளுநரிடம் முறைப்பாடு கொடுத்தமைக்காக வெளிநாட்டிலிருந்து வந்தவர் மீது வீடு புகுந்து சரமாரி வாள்வெட்டு!