யாழில் கோவில் பிரச்சினை தொடர்பாக ஆளுநரிடம் முறைப்பாடு கொடுத்தமைக்காக வெளிநாட்டிலிருந்து வந்தவர் மீது வீடு புகுந்து சரமாரி வாள்வெட்டு!

கோவில் பிரச்சினை தொடர்பாக வடமாகாண ஆளுநரிடம் முறையிட்ட அவுஸ்திரேலிய பிரஜை மீது இன்று காலை வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பண்டத்தரிப்பிலுள்ள முருகன் கோவில் நிர்வாகத்தில் நீண்டகாலமாக மோசடி இடம்பெற்றுள்ளதாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பார்வையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பண்டத்தரிப்பிற்கு சொந்தமான ஆலயத்திற்கு நிதியுதவி வழங்கி வரும் நபர் ஒருவர் அண்மையில் ஆளுநரை இந்த பிரச்சினை தொடர்பாக சந்தித்துள்ளார்.

ஆலய நிர்வாகத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பில் தீர்வு காணுமாறு கோரிய போது

அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்த ஒருவரின் வீட்டிற்கு சன்மானம் தருவதாக கூறி மூவர் கொண்ட குழு இன்று காலை நுழைந்துள்ளது

பரிசுப் பொருட்களில் மறைத்து வைத்து கோவில் நிர்வாகத்தில் தலையிட மாட்டீர்களா என கேட்டு சரமாரியாக வாள் வீசி தாக்கினார்.

வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த அவர் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய அவுஸ்திரேலிய பிரஜை ஒருவரே இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் மண்டைதீவு மற்றும் நாச்சிக்குடாவை சேர்ந்த இருவர் கைது!
Next articleயாழ்.அல்லாரையில் பெண்ணின் சங்கிலியை அறுத்த வழிப்பறி கொள்ளையன் கைது!