யாழ்.அல்லாரையில் பெண்ணின் சங்கிலியை அறுத்த வழிப்பறி கொள்ளையன் கைது!

வீதிக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மாதம் அல்லாரைச்சந்தியில் பெண்ணின் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி அறுபட்டது.

சம்பவம் தொடர்பில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Previous articleயாழில் கோவில் பிரச்சினை தொடர்பாக ஆளுநரிடம் முறைப்பாடு கொடுத்தமைக்காக வெளிநாட்டிலிருந்து வந்தவர் மீது வீடு புகுந்து சரமாரி வாள்வெட்டு!
Next articleஆற்றில் நீராடச் சென்ற சிறுவர்கள் இரண்டு பேர் நீரிழ் மூழ்கி பலி!