மோட்டார் சைக்கிளும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணிப்பெண்!

மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கஹடகஸ்திகிலியா – ரத்மல்கஹா வேவ பிரதான வீதியில் நேற்று (08) பிற்பகல் 2.30 மணியளவில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த 23 வயதான கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கஹடகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் கஹடகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹடகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஇனி நாட்டில் உள்ள அனைத்த பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு காலை உணவு!
Next articleமூச்சு திணறச் செய்த தனுஷ்க – பெண்ணின் மூளையில் ஸ்கேன் சோதனை!