ஜப்பானிலிருந்து சொகுசு ஜீப் இறக்குமதி செய்து தருவதாகக் கூறி 80 இலட்சம் ரூபா மோசடி : ஒருவர் கைது!

ஜப்பானில் இருந்து பிராடோ ஜீப் ஒன்றை இறக்குமதி செய்வதாக கூறி 80 இலட்சம் ரூபா மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அருட்தந்தை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று (09) உத்தரவிட்டார்.

நீர்கொழும்பைச் சேர்ந்த ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, தனது சேவையைப் பெற்றவர் இந்தப் பணத்தை வேறு ஒருவருக்கு வழங்கியுள்ளதாகவும், பல கோடி ரூபா மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு பிணையில் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த நபரிடம் பணத்தை வழங்கியதற்கான ஆவணத்தை முன்வைக்க முடியுமா என சந்தேகநபரிடம் நீதிபதி வினவியதோடு, அதனை முன்வைக்காத காரணத்தினால் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Previous articleயாழில் திடீர் திடீரென அமைக்கப்படும் சோதனைச் சாவடிகள் : வெளியான காரணம்!
Next articleமாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு : நெளபர், சாஜித் மெளலவிக்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு