அவுஸ்திரேலிய பெண் விவகாரம்; முதன் முதலாக வாய் திறந்த தனுக்ஷ்க!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக், அவுஸ்திரேலிய பெண் ஒருவர் தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை தாம் குற்றமற்றவர் என தெரிவித்துள்ளார்.

சிட்னியை தளமாகக் கொண்ட சான்ஸ் சட்ட நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சட்ட நிறுவனத்தின் படி, தனுஷ்கா குணதிலக் தன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நிரபராதி என அறிவித்துள்ளார்.

மறுபுறம், விசாரணையின் ஆரம்ப கட்டத்தை கருத்தில் கொண்டு மேலதிக தகவல்களை வழங்க அவரது நிறுவனம் தயாராக இல்லை எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரருக்கு எதிராக கற்பழிப்பு உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழ் – கொழும்பு சேவை; நாளை முதல் அமுலாகவுள்ள நடவடிக்கை!
Next articleஅடுத்த வருடம் நாடு மீண்டெழும் ; மத்திய வங்கி நம்பிக்கை !